லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நேற்று (07) பதிவான சிறு நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மொனராகலை அலுவலக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
லுணுகம்வெஹெர பகுதியில் நேற்று முற்பகல் 10.38 மணியளவில் 2.4 மெக்னிடியூட் அளவில் சிறு நில அதிர்வு பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.