நீதிபதியின் பதவி துறப்பு – நாடாளுமன்றில் கேள்விக்கணை தொடுக்க தயாராகும் எதிரணி

உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா பதவி துறந்த விவகாரம் தொடர்பில் எதிரணிகள் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளை தொடுக்கவுள்ளன.

ஒக்டோபர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இவ்விவகாரம் தொடர்பில் 27/2இன்கீழ், நீதி அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பவுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி, சுயாதீன அணிகளும் ‘நீதிபதி’ விவகாரத்தை சபைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளன.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ளன.

Related Articles

Latest Articles