கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்.
விசாரணைகளுக்கு சிஐடியினரும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் சட்டத்தரணிபோல்தான் நீதிமன்றத்துக்குள் வந்துள்ளார் எனவும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பெண்ணொருவரும் சட்டத்தரணிபோல் வந்துள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










