இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த எசிட் தாக்குதலில் ஆறு பேர் எரி காயங்களுடன் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த எசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இரத்தினபுரி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மேல் நீதிமன்றத்துக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் சேனாநாயக்க மற்றும் இரத்தினபுரி குற்ற புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் காமினி ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த எசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இரத்தினபுரி காவற்துறையினர் தெரிவித்தனர்.
எம்.எப்.எம்.அலி
