நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விடுத்த அழைப்புக்கிணங்க காந்தி பூங்காவில் இன்று காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மட்டக்களப்பு  மாநகர சபை மேயர் மற்றும் பிரதேச சபை சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles