நீரில் மூழ்கி சிறுவன் பலி: அவிசாவளையில் சோகம்!

அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles