நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களுக்கு நாளை முதல் பூட்டு

நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன.

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், நீர்கொழும்பு நகர சபைத்தலைவர் தயான் லான்ஷாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles