நீர்க்கட்டணத்தை குறைக்க அமைச்சரவை அனுமதி

நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவு வீதத்தில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று (12.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

02. நீர்க்கட்டணத் திருத்தம்

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவ வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.

அதற்கமைய, பின்வரும் வகையில் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இல. கட்டண வகுதி உத்தேச குறைக்கப்படும் வீதம் (%)

01. சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட வீடுகள் தவிர்ந்த வீட்டு அலகுகள் 7 %
02. அரச மருத்துவமனைகள் 4.5 %
03. பாடசாலைகள் மற்றும் வணக்கத் தலங்கள் 6.3 %
ஒட்டுமொத்த குறைக்கப்பட்ட தொகை 5.94 %

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles