நுகேகொடை கூட்டம்: இதொகாவும் பங்கேற்காது!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தினார்.

மக்களின் நலன்கருதி ஜனநாயகம் மற்றும் இதர விடயங்களுக்காக எதிரணிகளுடன் இணங்கி செயற்பட வேண்டிய இடங்களில் இணைந்து செயற்பட முடியும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணி எனக் கூறும் தரப்பால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles