நுகேகொடை மேம்பாலத்தில் கோர விபத்து

நுகேகொட மேம்பாலத்தில் இராணுவத்தின் கெப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த மேலும் இரண்டு சிப்பாய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி எனவும், காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles