ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி நாடாவிய ரீதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.
இதற்கு ஆதரவாக நுவரெலியாவிலும் திங்கட்கிழமை (30) நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
செ.திவாகரன், டி.சந்ரு
