நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – ‘கொவிட்’ அச்சத்தில் அங்கு வாழும் மக்கள் (படங்கள்)

நுவரெலியாவில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சம் நுவரெலியா வாழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.

இவ்வாறு நுவரெலியாவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று
தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடமுறைகளை பின்பற்றுவதில்லை. முக கவசங்களை அணியாமலும் இடை வெளிகளை பின்பற்றாமலும் அங்கும் இங்கும் அழைந்து திரிகின்றனர். இதனை எவரும் கண்டுக்கொள்வதில்லை.இதனால் இங்குள்ள மக்கள் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

விடுமுறை நாட்களில் விக்டோரியா பூங்காவிலும் கிரகறி பூங்காவிலும் கிறகறி
வாவி கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்ட கூட்டமாக குவிந்திருகின்றார்கள். அத்தோடு நுவரெலியா வாவி கரையில் அமைக்கப் பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் பிராதான பாதைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதேவேளை நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில் கொரொனா தொற்றாளர்கள்
குறைவாகவே அடையாளம் காணப்பட்டனர்.
ஆனால் தற்பொழுது தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்பொழுதும்
25 தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகமானவர்கள் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின் பற்றாததால் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் வைத்தியர் மகேந்திர செனிவிரன தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர பொது சுகாதார அதிகாரி டீ. எம். எஸ். பீ. தெல்பிடிய தெரிவிக்கையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதால் தொற்றாளர்கள் அதிகரிக்கவில்லை. இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்கள் அதிகரிப்பது போலவே நுவரெலியாவிலும் தொற்றாளர்கள் அதிகரிக்கின்றனர்.

முதலாவது தடுபூசியாக சைனோபாம் தடுப்பூசி கடந்த 2021 ஆண்டு மே ஜுன்
மாதத்திலும் இரண்டாவது தடுப்பூசியாக சைனோபாம் 2021ஆகஸ்ட் மாதத்திலும் மூன்றாவது தடுப்பூசியாக பைசார் தடுப்பூசி கடந்த வருடம் டிசெம்பர் மாதம் முதல் தற்பொழுதும் வரை வழங்கி வருகின்றோம். மூற்றாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் நுவரெலியா மாநகரசபை சுகாதார பிரிவு காரியாளயத்தில் ஏற்றிக்கொள்ள முடியும் என கூறினார்.

(நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)

Related Articles

Latest Articles