நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – கொரோனா பரவும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் வார இறுதியில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சம் நுவரெலியா வாழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளில் அதிகமானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுகாதார வழிமுறைகளை அலட்சியப்படுத்தி நடமாடுவதை காணமுடிகிறது. சுற்றுலா பிரயாணிகள் லவர் சீலிப் நீர்வீழ்ச்சி, விக்டோரியா பூங்கா, கிறகறி வாவி சூழலியல் பூங்கா,உலக முடிவு , சீத்தாஎலிய கோவில் போன்ற பகுதிகளுக்குச் சென்றுவருகின்றனர்

இதனால் நுவரெலியா – பதுளை நுவரெலியா – கண்டி ,நுவரெலியா ஹற்றன் போன்ற பிரதான வீதியெங்கும் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிவதாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Related Articles

Latest Articles