ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை. சுயேட்சையாக போட்டியிட்ட அனுசா சந்திரசேகரனும் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.
விருப்பு வாக்குபட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கின்றார் என எமது நிருபர் தெரிவித்தார்.