‘நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய மிதக்கும் விருந்தகம்’

நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம், நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதனை மீறும் விதத்தில் குறித்த மிதக்கும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரும், அங்கு கடமையாற்றிய இரண்டு நபர்களும் நடமாடும் விருந்தகத்திலேயே நேற்று தினமைப்படுத்தப்பட்டனர்.

எனினும், நுவரெலியா ஆடைத் தொழிற்சாலை ஒன்றிற்கு கடமை நிமித்தமாக வருகை தந்திருந்த நான்கு பேரும், தங்களுடைய வீடுகளில் தம்மை தனிமைப்படுத்துமாறு நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பிரகாரம் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிதக்கும் விருந்தகத்தில் பணியாற்றிய இருவரும் அதற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய மிதக்கும் விருந்தகம்’

Related Articles

Latest Articles