நுவரெலியாவில் ‘தமிழை’ காணோம்!

‘குட்டி இங்கிலாந்து’ என விளிக்கப்படும் நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகும்.

எனினும், நுவரெலியா பிரதான நகரில், நுவரெலியா – பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு அமைய, தூர பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போக்குவரத்து பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாவதனால் சாரதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles