நுவரெலியாவில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

நுவரெலியா ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் (26) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து சுற்றிவளைக்கப்பட்டதுடன் 34 வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 300 மதனமோதகம் போதை குளிசைகள் பொதிசெய்யப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் மேலும் எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றிலே குறித்த மதனமோதக போதை குளிசைகளை விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் அஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles