நுவரெலியாவில் வண்ணமயமான மலர் கண்காட்சி ஆரம்பம்

எழில் கொஞ்சும் நுவரெலியா நகரில் வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் இன்று (20) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

ஏப்ரல் மாத வசந்த காலத்தில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மலர் கண்காட்சியில் விதவிதமான மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், மிருகங்களின் உருவம் , காய்கறிளின் உருவம் என பல வடிவங்களில் உருவ அலங்காரங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன .

குறித்த மலர் கண்காட்சியில் அதிகமான அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க மற்றும் கண்டி இந்திய உயர் ஸ்தானிகர் வைத்தியர் எஸ். அதிரா மற்றும் நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, முன்னாள் மாநகரசபை முதல்வர்கள் ,

நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
எனவே நுவரெலியா வரும் சுற்றுலாப் பயணிகள், அழகை ரசிப்பதோடு இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என மாநகரநபையினர் கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51

Related Articles

Latest Articles