நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் , வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார் (14) புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Related Articles

Latest Articles