நுவரெலியாவில் அடுத்த வருடம் ஜனவரியில் தமிழ் உத்தியோகத்தர்களை கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
புலம் பெயர் தொழிலாளர்களின் சிறுவர்களின் நலன்களுக்காக தனியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களின் மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலையை தெரிவு செய்து அந்த பாடசாலைகளில் இவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அந்த மாணவர்களுக்கு சமூகத்தில் கௌரவம் மேலும் அதிகரிக்கும். இதற்கான முதல் கட்டத்தை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அதிகளவான மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்கின்றனர். இதன்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்புக்கு, கண்டிக்கு அல்லது பதுளைக்கு செல்ல வேண்டியுள்ளது. மொழி பிரச்சினையும் உள்ளது. எனவேதான், தமிழ் உத்தியோகத்தர்களை கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமொன்று நுவரெலியாவில் திறக்கப்படும்.” -எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
