நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம் – தேடுதல் தொடர்கிறது

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தில் 25 வயதுடைய யுவதியொருவர் நேற்று (05) முதல் காணாமல்போயுள்ளார்.

ஜெயபாலன் நிலானி ன்ற யுவதியே, இவ்வாறு விறகு தேடச் சென்ற நிலையில், இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இது தொடர்பில், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் யுவதியின் தந்தை நேற்று (05) முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் சிறுது காலம் புத்திசுயாதீனமற்று காணப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் யுவதியின் தந்தை, பொலிஸ் முறைப்பாட்டில் பதிவிட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நிருபர் – டி. சந்ரு

Related Articles

Latest Articles