நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், நேற்று வெள்ளம் காரணமாக தடைப்பட்ட கந்தபளை வீதியில் பரீட்சைக்கு வந்த சிறுவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)