நுவரெலியா கிரகரி வாவியை தூய்மைப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா கிரகரி வாவி குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய – நுவரெலியா நகரில் கிரகரி வாவியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமானது.

நுவரெலியாவுக்கு நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதில் கிரகரி வாவி
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த சொர்க்கமாக விளங்குகிறது.

இந்நிலையில் நுவரெலியா கிரகரி வாவியினை அபிவிருத்தி செய்யும் திட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் தலைமையில் ” கிரீன் இன்டஸ்ட்ரியல்” தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நுவரெலியா பகுதியைத் தேர்வு செய்கிறார்கள், குறுகிய வார விடுமுறை முதல் நீண்ட விடுமுறை வரை, கிரகரி வாவியின் சுற்றுச்சூழல் மண்டலத்தில் ஓய்வு நேரத்தை செலவிடுவதே இதன் முதன்மை நோக்கமாகும் .

எனினும் கிரகரி வாவி முழுவதும் பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் குவியல் குவியலாக உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை அகற்றியும் வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது குறிப்பாக வாவியிலும் , நடைப்பாதையில் கிடக்கும் கழிவுகள் காரணமாக படகு சவாரி, குதிரைவண்டி, துவிச்சக்கரவண்டி சவாரி போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையை கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்ட செயலகம் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles