குரு சரவணபாபா சுவாமிகளின் ஜனன தினத்தை முன்னிட்டும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடனும் எதிர்வரும் 11.10.2022 செவ்வாய்க்கிழமை நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் விசேட மகாயாக பூஜை நடைபெறவுள்ளது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள யாக பூஜையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்ற முருக பக்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது கோட்லோஜ் தோட்டத்தின் குறிஞ்சி குமரன் ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள சுமார் 15 அடி உயரமான முருகன் சிலைக்கான அடிக்கல்லும் நாட்டப்படவுள்ளது.
அத்துடன் சத்குரு சரவணபாபா சுவாமிஜிக்கு இறையாசி வேண்டியும் இலங்கையின் மாற்றத்திற்காகவும் விசேட மகா ஆயுஷய ஹோமம் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு குறிஞ்சி குமரன் ஆலயத்தின் நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.










