நுவரெலியா நகரிலுள்ள உணவகமொன்றில் தீ விபத்து

நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் ஆகியோரின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீ பரவலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கம் போல உணவகத்தில் சமையல் வேலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீபரவல் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles