நுவரெலியா பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபை உறுப்பினர்களால் எகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நானுஓயா பிரதான காரியாலய கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் உட்பட சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 23 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருந்தனர்.
ஆர்.தமிழ்செல்வன்,எஸ்.நித்தியாகலா மற்றும் பி.எஸ்.ரத்நாயக்கா ஆகிய மூன்று உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையிலுள்ள சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்ளும்படி தெரிவித்து வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 18 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அஜீத் உயாங்கொட வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.இருப்பினும் நுவரெலியா பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
