‘நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலங்களின் உப அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும்’

நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முதலாவது உப பிரதேச செயலகம் தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல உப பிரதேச செயலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன – என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கான உப அலுவலகம் (23.12.2021 ) தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் அம்பகமுவ , வலப்பனை, அங்குராங்கெத்த, கொத்மலை பகுதிகளுக்கான உப பிரதேச செயலகங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

முதலாவதாக தலவாக்கலை நகரில் உப பிரதேச செயலக அலுவலகம் திறந்து வைக்கபட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு அடுத்த அடுத்த வாரங்களில் திறந்து வைக்கப்படும் . இதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவையினை மிகவும் இலகுவாக ஆற்றிக்கொள்ளக்கூடிய வகையில் அமையப்பெரும்.

அதேபோல எல்லை நிர்ணய சபையிடம் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதற்கான வேலைத்திட்டங்களை பிரதேச செயலாளர் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles