நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று 20 ம் திகதி காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த நீர்த்தேக்கத்தில் ஒரு செக்கனுக்கு சுமார் 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் விமலசுரேந்திர,காசல்ரி,மவுசாகலை,கெனியோன் லக்சபான,பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் எனவே நீர்த்தேக்களுக்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது.
இதே வேளை மழை தொடரச்சியாக பெய்து வருவதனால் டெவோன் சென்கிளையார் ஆகிய நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த நீர் வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்வதனை தவிர்த்து கொள்வதன் மூலம் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சி செய்தி ஒன்றினை உருவாக்குக.










