நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செ
மஸ்கெலியா மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கொழும்பில் இருந்து சென்றவர்களுக்கும், அவர்களுடன் பழகியவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் நேற்று 335 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொழும்பு – 189
கம்பஹா – 47
நுவரெலியா – 11
புத்தளம் – 11
கண்டி – 08
பொலிஸ் – 33










