புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் கடந்த கால அபிவிருத்திகள் மற்றும் எதிர்காலத்தில் மாநகர சபை, நகர, பிரதேச சபைகள் மற்றும் அரச திணைகளங்களில் செயற்பாடுகள் தொடர்பாகவு விரிவாக கலந்துரையாடபட்டது.
இக்குழுகூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்கமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தில் போக்குவர்த்து வசதிகள் குறைப்பாடுகள் திகழ்வதாக அதிகாரிகள் முன்வைத்தனர் இதனை கருத்திற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தின் போக்குவரத்துக்காக வாகன வசதிகளை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் நகரத்தின் அபிருவித்தி கழிவகற்றல் மற்றும் வீடமைப்பு, மலையகத்தின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்குழுகூட்டதில் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் தலைலவர் எஸ்.பி திசாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர,நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள்,அரச திணைகளங்களின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
க.கிசாந்தன்