எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 150 ஆக இருந்தது.
எனினும், 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் அத்தொகை 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 43 ஆயிரத்து 576 பேர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
அத்துடன், 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 416 பேர் வாக்களிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அளிக்கப்பட்ட வாக்குகளிலும் 32 ஆயிரத்து 718 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் பதிவுசெய்யப்பட்ட, அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, செல்லுபடியான வாக்கு விபரமும், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
1.நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதி
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 302,836
அளிக்கப்பட்ட வாக்குகள் – 231,597
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 18,101
செல்லுபடியான வாக்குகள் – 213,496
வாக்களிப்பு வீதம் – 76.48%
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 330,761
2. கொத்மலை தேர்தல் தொகுதி
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 78,068
அளிக்கப்பட்ட வாக்குகள் – 59,454
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,482
செல்லுபடியான வாக்குகள் – 54,972
வாக்களிப்பு வீதம் – 76.16%
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 84,175
3.ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 71,053
அளிக்கப்பட்ட வாக்குகள் – 52,269
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,391
செல்லுபடியான வாக்குகள் – 47,878
வாக்களிப்பு வீதம் – 73.56%
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 75,278
4.வலப்பனை தேர்தல் தொகுதி
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 82,193
அளிக்கப்பட்ட வாக்குகள் – 62,047
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,539
செல்லுபடியான வாக்குகள் – 56,508
வாக்களிப்பு வீதம் – 75.49%
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 87,503
நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவு – 2015
ஐக்கிய தேசியக் கட்சி – 228,920 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 147,348 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றின. இதர கட்சிகளால் 11 ஆயிரத்து 678 வாக்குகளையே பெறமுடிந்தது.
2020 பொதுத்தேர்தல் …….
2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், வாக்குகள் சிதறக்கூடிய அபாயம் இருக்கின்றது. இதனால் இருக்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
வாக்குரிமை என்பது எமது பிறப்புரிமையாகும். அதுவே பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதமும்கூட எனவே, கடமைக்காக வாக்களிக்காமல், மதிநுட்பத்துடன் வாக்களிப்பதே சிறந்தது. இம்முறை கட்டாயம் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்துவதே சிறப்பு…….