நுவரெலியா வலயத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!

நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக டி.எம்.பி.சி.லசந்த அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் பதில் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிஹால் அழககோன் கம்பளை வலய கல்வி காரியாலயத்திற்கு பணிப்பாளராக இடமாற்றம் பெற்றதையடுத்து அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித்.யு.கமகேவினால் இன்று (21) வழங்கப்பட்டது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான டி.எம்.பி.சி.லசந்த அபேரத்ன ஆசிரியர் சேவையில் இணைந்து நுவரெலியாவிலுள்ள பெரக்கும்புர ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார்.

அதன் பின்னர் அம்பேவல, ஹிட்டிகல மற்றும் நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் பாடசாலைகளில் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். 2017 ஆம் ஆண்டு பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்ற இவர், இறுதியாக கொத்மலை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles