நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் (படங்கள்)

நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( 22 ) புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட “ஸ்னூக்கர்” போட்டியில் முதலாம் இடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாம் இடத்தை நிமால் அபேநாயக்க
வும் பெற்றனர்.

36 விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றிய இப்போட்டியின் இறுதிப்போட்டியில் 40 – 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமிந்த கொடிகார வெற்றி பெற்றார்.

34 போட்டியாளர்கள் பங்குப்பற்றிய “பிலியட்” போட்டியின் இறுதிப் போட்டியில் 48–40 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தை எம். டி. பூசோவும் இரண்டாம் இடத்தை சஞ்ஞிவ ஹேரத்தும் பெற்றனர்.

12 விளையாட்டு வீரர்கள் பங்குப்பற்றிய மேசை பந்து ( டேபல் டெனிஸ்) போட்டியில் முதலாம் இடத்தை யசித்த பிட்டிகளவும் இரண்டாம் இடத்தை அருண சாந்த ஹெட்டியாராச்சும் பெற்றனர்.

Related Articles

Latest Articles