நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் – பிரதமர்

இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு  வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்வதாகவும் விரைவில் அதை நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்றத்தை மேற்கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கையை சீனா நிராகரிப்பதாக தெரிவித்த நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மின்சார திருத்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தாகவும் 21ஆவது திருத்தத்தை படிப்பதற்கு அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.

சில முன்னாள் அமைச்சர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பதிவியை ஏற்காமையால் அதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்ய நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிணை எடுப்பதை அரசாங்கம் நாடுகிறது என்றாலும், நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நன்கொடையாளர் முகவர் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles