‘நேசக்கரம் நீட்டும் இந்தியாவை என்றும் மறக்ககூடாது’ – ராதா

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை மக்கள் பட்டினிச்சாவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த அனைத்து உதவிகளையும் நாம் என்றுமே மறந்து விட முடியாது. எனவே நாம் என்றும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றிக் கடன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்திடம் இருந்து இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய இரண்டாம் கட்ட பொருட்கள் இன்றைய 24.06.2022) தினம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இந்த பொருட்களை கையேற்றுக் கொண்டதுடன் அதனை இலங்கை குழுவினரிடம் கையளித்தனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ,பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் ராமநாதன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராதாகிருஸ்ணன்

இலங்கைக்கு தற்பொழுது இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் செய்துவருகின்ற உதவிகள் எங்களுடைய நாட்டின் மக்களை காப்பாற்றுவதற்கும் அவர்களுடைய பசியை தீர்ப்பதற்கும் உதவியாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்கின்ற உதவிகளை நாம் வரவேற்பதுடன் இன்றைய சூழ்நிலையில் இந்த உதவிகள் கிடைக்காவிட்டால் நாம் நிச்சயமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியிருப்போம்.

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு எதிராக பல போராட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதனை மறந்து மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றமையானது மோடியின் பெருந்தன்iமையையும் அவர் இந்த நாட்டு மக்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையும் தெளிவாக புரிகின்றது.

தொடர்ந்தும் நாம் இந்திய அரசாங்கத்துடன் பயணிக்க முடியுமாக இருந்தால் நிச்சயமாக இன்னும் பல நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியம்.எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எதிர்ப்பதைவிட்டுவிட்டு அவர்களுடன் இணைந்து பயணித்து அவர்கள் மூலமாக நன்மைகனை பெற்றுக் கொண்டு எமது நாட்டின் அபிவிருத்தியை முன் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இதனை இந்த நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.விசேடமாக இந்தியா என்றாலே எதிரியை பார்ப்பதைப்போல பாரக்கின்ற ஒரு சிலர் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய இந்த சூழ்நிலைக்கு காரணமே ஒரு குடும்பத்தின் செயற்பாடு என்று சொன்னால் அது மிகையாகாது.அவர்கள் செய்த தவறால் இன்று முழு நாட்டு மக்களுமே தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.எனவே எதிர்வரும் காலங்களில் இதனை உணர்ந்து அனைத்து தரப்பினரும் செயற்படுவதற்கு முன்வi வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles