கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால்தான் இவர்கள் உயிரிழந்தனர் என்பது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
7 ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று மாத்திரம் ஆயிரத்து 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
