நோர்வூட்டில் கால்வாய்க்குள் வீழ்ந்து கார் விபத்து – ஒருவர் காயம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் – ஹட்டன் பிரதான வீதியில் அயரபி பகுதியில் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை 05 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறுவர் ஒருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles