நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் முகநூலில் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தி, தகுந்த சோதனைகளை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மேலும் பலருக்கு பரவுவதைத் தடுக்கும் என்பதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதனை மறைக்காமல், உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது நம் அயவர்களுக்கும் அது நன்மையை ஏற்படுத்தும்.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனை.
அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்.
– போகா நேசன்