பங்களாதேஷில் இந்துக்கோயில்கள் மீது தாக்குதல் : பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

பங்களாதேஷில் உள்ள இந்துக் கோயில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடளிக்க முடியாது என்றும், இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவரார்த்தி பூஜையை முன்னிட்டு பங்களாதேஷிலும் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பங்களாதேஷ் ஊhயவவழபசயஅ நகரில் இந்து ஆலயங்கள் மீது கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினராக அல்லாமல் ஏனைய பிரஜைகளைப் போல சம உரிமைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்து மதத்தினர் தமது மத வழிபாடுகளையும், நம்பிக்கைகளையும் முன்னெடுக்க எந்தவொரு தடையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான தாக்குதல்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்பதுடன் இந்து ஆலயங்களில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, பங்களாதேஷில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles