இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின2ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும்.
3 போட்டிகளைக்கொண்ட ரி – 20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.