பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு 6 மாதங்கள் சிறை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது.

இதையடுத்​து, சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யத்​தில் ஹசீனா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இந்த வழக்கை விசா​ரித்த தீர்ப்​பா​யம் ஹசீனா ஆஜராக உத்​தர​விட்​டது.

ஆனால் அவர் ஆஜராக​வில்​லை. இதையடுத்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.
இந்​நிலை​யில், நீதிமன்ற தலை​வர் நீதிபதி முகமது குலாம் முர்​துசா மஜும்​தார் தலை​மையி​லான 3 பேர் அடங்​கிய அமர்​வு, நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் ஹசீ​னா​வுக்கு 6 மாதம் சிறை தண்​டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்​கியது.

பங்களாதேஷில் இருந்து தப்​பிய பிறகு ஹசீ​னா​வுக்கு சிறை தண்​டனை வழங்​கப்​பட்​டிருப்​பது இது​தான் முதல் முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Related Articles

Latest Articles