பங்காளிக்கட்சிகளின் ஆவணம் இன்று முன்வைப்பு – தலைமை தாங்குகிறது சுதந்திரக்கட்சி!

” கட்சி மத்திய குழு அனுமதி வழங்கினால் அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மீண்டும் அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்புவது தொடர்பிலும் ஆராயப்பட்டது என்று கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், அரச பங்காளிக்கட்சிகள் இணைந்து இன்று (03) நடத்தும் கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்கும் எனவும், அக்கூட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேனவே தலைமை வகிப்பார் எனவும் தயாசிறி குறிப்பிட்டார்.

நாட்டை மீட்டெடுப்பது தொடர்பான யோசனை அடங்கி ஆவணத்தை பங்காளிக்கட்சிகள் இன்று வெளியிடவுள்ளன.

Related Articles

Latest Articles