பசறையில் குளவிக்கொட்டு – பல மாணவர்கள் பாதிப்பு!

பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

பசறை, மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பசறை பொது மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மரமொன்றில் இருந்த குளவி கூடொன்று கலைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கொட்டியுள்ளது.

இதனால் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 மாணவர்கள் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 55 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் பசறை பொது வைத்தியசாலையின்பொருப்பதிகாரி ஜானக கல்கந்த தெரிவித்தார்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles