பசறை, 10 ஆம் கட்டைப் பகுதியில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடனடியாக மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பட்டார். தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி காலை 5.00 மணிக்கு புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வைத்து இறங்க முற்பட்டவேளையிலேயே அவர் கீழே விழுந்துள்ளார்.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமு தனராஜ்
