பதுளை, பசறை பகுதியில் பெண்ணொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றினாலேயே சூடு நடத்தப்பட்டுள்ளது.
பசறை வீதி ஹிந்தகொட பகுதியிலேயே இத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் 32 வயதுடைய வெளிமடை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவர் 35 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் எனவும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்த நபரின் தகாத உறவே காரணம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.