பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

பசறை கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

69 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பசறை – பராக்கிரம மாவத்தை பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles