பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு (வயது 4 மற்றும் 17) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரிடையே மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின்படி புதிய தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதாக பிரதேச பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி இப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
இத்திட்டத்தில் 107 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான உலர்உணவு பொருட்கள் உட்பட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கான பசறை பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
நடராஜா மலர்வேந்தன்










