அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளின் பசறை கல்வி வலய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 21,22 ஆம் திகதிகளில் பசறை தமிழ் தேசிய பாடசாலையில்,பசறை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.ஏ.சரினாபேகம் தலைமையில் இடம்பெறவுள்ளதாக போட்டிகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல்) தெரிவிக்கின்றார்.
இப்போட்டிகள் தொடர்பான அழைப்புக் கடிதங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரிவு 1,2,3 இற்கான வாசிப்பு, ஆக்கத்திறன் வெளிப்பாடு, பேச்சு, பாவோதல், இலக்கிய விமர்சனம், தனி நடிப்பு, அறிவிப்பாளர், இசையும் அசைவும், இசை தனி , இசை தனி குழு- 1,11, நடனம் தனி, நடனம் குழு ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
22 ஆம் திகதி சனிக்கிழமை திறந்த போட்டிகளான நாட்டார் பாடல்,இலக்கிய நாடகம், வில்லுப்பாட்டு, விவாதம், தமிழறிவு வினா விடை (வாய்மொழி ) மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சி என்பவை இடம்பெறவுள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நிகழ்விற்காக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பசறை நிருபர்
