பசறை சுகாதார பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா!

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் நேற்று ( 25) 10 தொற்றாளர்களும் இன்று (26)
மேலும் 23 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளர்.

குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொற்றாளர்கள் பசறை நகரை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்று பசறை தொலம்பவத்த பகுதியில் தொற்றாளர்களோடு தொடர்புடைய 125 பேரினது பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்படுவதாகவும் பிரதேச பொதுசுகாதார மேற்பார்வை பரிசோதகர் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles