பதுளையில் இன்று (13.07.2021) மேலும் 10 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாகவும், அவர்கள் பிந்துனுவெல மற்றும் ககாகொல்லை கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பசறை பகுதியின் கோணக்கலை தோட்டத்தில் நால்வர், உடகம கிராமத்தில் இருவர், பரமங்கட கிராமத்தில் இருவர் பசறை நகரில் இருவர் என்ற வகையில் பத்து பேரே கோவிட் தொற்றக்கிழக்காகியுள்ளனராவர்.
11.07.2021ல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் அறிக்கை 13.07.2021(இன்று) முற்பகல் வெளியான போதே, மேற்கண்ட தொற்று அடையாளங் காணப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி தொற்றாளர்களுடன் உறவுகளைப் பேணிய 60 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் விரைவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
